ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்-வீராங்கனைகள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். #NarendraModi
புதுடெல்லி,
இந்தோனேசியாவில் நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 15 தங்கம் உட்பட 69 பதக்கங்களை குவித்தது. பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகள் நேற்று முன் தினம் நாடு திரும்பினார்கள். அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், ஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகள் புதுடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது அவர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்.
பின்னர் வீராங்கனைகள் டூட்டிசந்த், ஸ்வப்னா பர்மன், ஹிமா தாஸ் உள்ளிட்டோரை தனித்தனியாக அழைத்து பாராட்டினார். பின்னர் வீரர்-வீராங்கனைகள் பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Related Tags :
Next Story