தேசிய செய்திகள்

ராகுல் காந்தி ‘இந்தியாவின் மிகப்பெரிய கோமாளி’ சந்திரசேகர் ராவ் கேலி + "||" + TRS announces list of 105 candidates for Telangana elections

ராகுல் காந்தி ‘இந்தியாவின் மிகப்பெரிய கோமாளி’ சந்திரசேகர் ராவ் கேலி

ராகுல் காந்தி ‘இந்தியாவின் மிகப்பெரிய கோமாளி’ சந்திரசேகர் ராவ் கேலி
தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது என சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.
ஐதராபாத்,

தெலுங்கானாவில் மாநில சட்டப்பேரவையை கலைக்க பரிந்துரை செய்துள்ள முதல்வர் சந்திரசேகர் ராவ், தேர்தலில் போட்டியிடும் தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதியின் 105 வேட்பாளர்களையும் (மொத்தம் 119 தொகுதிகள்) அதிரடியாக அறிவித்துள்ளார். தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் ஆட்சிக்காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் உள்ளது.  இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஷ்கார் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களின் சட்டசபை தேர்தலோடு சேர்த்து தெலுங்கானா மாநில தேர்தலையும் நடத்த சந்திரசேகர் ராவ் விரும்புகிறார். 

தெலுங்கானா சட்டசபையை கலைக்கப்பட்டதற்கான முறைப்படியான அறிவிப்பை ஆளுநர் நரசிம்மன் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநரிடம் பரிந்துரையை சமர்பித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர் ராவ், தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது என கூறியுள்ளார். தெலுங்கானாவில் 2014-ம் ஆண்டுக்கு முன்னர் குண்டு வெடிப்புகள், மின்சார பிரச்சனைகள் மதவாத மோதல்கள் இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இவை கிடையாது. இப்போது களத்திற்குவர காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன், பொதுமக்கள் அவர்களுக்கு சரியான பதிலடியை கொடுப்பார்கள். ராகுல் காந்தி இந்தியாவின் மிகப்பெரிய கோமாளி என்பது அனைவருக்கும் தெரியும். மோடி அருகே சென்று அவரை கட்டிபிடித்து மற்றும் கண் அடித்ததை இந்தியாவே பார்த்தது. ராகுல் காந்தி எங்களுக்கு ஒரு சொத்து, அவர் தெலுங்கானாவில் கால் வைத்தாலே எங்களுக்கு வெற்றிதான் என கூறியுள்ளார்.   
 
100 சதவிதம் நாங்கள் மதசார்பற்ற கட்சி எப்படி பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க முடியும்? என கேள்வியை எழுப்பிய சந்திரசேகர் ராவ், நாங்கள் தேர்தலில் தனியாக போட்டியிடப்போகிறோம், மஜ்லிஸ் இத்தேஹதுல் முஸ்லிமீன் கட்சி (எம்.ஐ.எம்) எங்களுடைய நண்பர்கள் என்பதில் ஐயம் கிடையாது என கூறியுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. மகளின் கணவரை கொலை செய்ய ஒரு கோடி ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏவிய தந்தை பரபரப்பு வாக்குமூலம்
மகளின் கணவரை கொலை செய்வதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏவிய தந்தை பரபரப்பு வாக்கு மூலம் அளித்து உள்ளார்.
2. தெலுங்கானாவில் புதிய கூட்டணி உதயம், ஜனாதிபதி ஆட்சிக்கு வலியுறுத்தல்
தெலுங்கானாவில் ஜனாதிபதி ஆட்சியை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்ற காங்கிரஸ், தெலுங்கு தேசம் வலியுறுத்தியுள்ளது. #Telangana #Congress
3. தெலுங்கானா முதல்வரின் உத்தேச தேர்தல் தேதி அறிவிப்புக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்
தெலுங்கானா முதல்வரின் உத்தேச தேர்தல் தேதி அறிவிப்புக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
4. தெலங்கானா சட்டசபையை கலைக்க கவர்னர் ஒப்புதல்
மந்திரிசபையின் பரிந்துரையை ஏற்று தெலங்கானா சட்டசபையை கலைக்க கவர்னர் ஒப்புதல் அளித்து உள்ளார்.
5. தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான 105 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் சந்திரசேகர ராவ்
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான 105 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காபந்து முதல்வர் சந்திரசேகர ராவ் வெளியிட்டார்.