தேசிய செய்திகள்

அன்றாட உரையாடல்கள் மூலம் இந்தியை பரப்ப வேண்டும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை + "||" + Avoid complex terms when using Hindi PM Modi

அன்றாட உரையாடல்கள் மூலம் இந்தியை பரப்ப வேண்டும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

அன்றாட உரையாடல்கள் மூலம் இந்தியை பரப்ப வேண்டும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை
அரசு விவகாரங்களுக்கு இந்தி மொழியை பயன்படுத்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரையை வழங்கியுள்ளார்.

புதுடெல்லி, 

 
31-வது மத்திய இந்தி குழுவின் கூட்டம் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் குஜராத், இமாசலபிரதேசம் மற்றும் அருணாசலபிரதேசம் மாநில முதல்–மந்திரிகளும், குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி பேசுகையில் 
அரசு விவகாரங்களுக்கான இந்தி மொழியை பயன்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரையை வழங்கினார். 

அன்றாட உரையாடல்கள் மூலம், இந்தியை பரப்ப வேண்டும். அரசு விவகாரங்களுக்காக அதிகாரிகள் உரையாடும்போது சிக்கலான வார்த்தைகளை தவிர்த்து, உரையாடலை எளிமைப்படுத்த வேண்டும் என்று கூறினார் என பிரதம அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு மற்றும் சமூகத்தில் இந்தியின் பயன்பாட்டுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும். இதற்கு கல்வி நிறுவனங்கள் உதவலாம். இந்தி உள்பட அனைத்து இந்திய மொழிகள் மூலமும் உலகத்துடன் இந்தியா தொடர்பு வைத்துக்கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.