ஓரின சேர்க்கை தீர்ப்பு: பல தரப்பினரும் வரவேற்பு ஆர்வலர்கள் கொண்டாட்டம்


ஓரின சேர்க்கை தீர்ப்பு: பல தரப்பினரும் வரவேற்பு ஆர்வலர்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 6 Sep 2018 11:45 PM GMT (Updated: 6 Sep 2018 10:28 PM GMT)

வயது வந்த 2 பேர் சம்மதித்து அந்தரங்கமாக மேற்கொள்கிற ஓரின சேர்க்கை குற்றம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று அளித்த தீர்ப்பை பல தரப்பினரும் வரவேற்று உள்ளனர்.

புதுடெல்லி,

வயது வந்த 2 பேர் சம்மதித்து அந்தரங்கமாக மேற்கொள்கிற ஓரின சேர்க்கை குற்றம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று அளித்த தீர்ப்பை கரண் ஜோஹர், ஜான் ஆபிரகாம், பர்ஹான் அக்தர் உள்ளிட்ட பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள், ஓரின சேர்க்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் வரவேற்று உள்ளனர்.

அனைவரும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என வர்ணித்தனர்.

இந்தியாவில் உள்ள ஐ.நா. சபை அமைப்பு வரவேற்று உள்ளது. இது ஓரின சேர்க்கையாளர்களுக்கு முழுமையான அடிப்படை உரிமைகளுக்கு உறுதி அளிக்கும் தீர்ப்பு என கூறியது.

காங்கிரஸ் கட்சியும் இந்த தீர்ப்பை வரவேற்று உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அறிந்ததும், டெல்லியில் நேற்று ஓரின சேர்க்கையாளர்கள் ‘வானவில்’ கொடி ஏந்தி, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறியும், கை குலுக்கிக்கொண்டும், கட்டித் தழுவியும், இனிப்புகளை ஊட்டியும், ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர்.


Next Story