தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தமிழக அரசின் வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் + "||" + SC to hear TN s plea against NGT order giving Vedanta limited access to plant

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தமிழக அரசின் வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தமிழக அரசின் வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தமிழக அரசின் வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

புதுடெல்லி,


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வேதாந்தா குழுமம் டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சென்றது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்குள் அதன் நிர்வாகப் பிரிவு அலுவலகம் செயல்படலாம் என்று அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் எந்த விதமான உற்பத்தி பணிகளும் கண்டிப்பாக நடைபெறக் கூடாது என உத்தரவிட்டது.

ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது. குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் செயல்படுவார். இந்த குழுவில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். இந்த குழு 2 வாரங்களில் பொறுப்பேற்று கொண்டு, 6 வாரங்களில் ஆய்வுகளை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றது.

இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்தது. இப்போது நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் கலெக்டரிடம் ஒப்பந்த தொழிலாளர்கள் வலியுறுத்தல்
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கலெக்டரிடம் ஒப்பந்த தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
2. ஊழல் குற்றச்சாட்டு வழக்கு: சி.பி.ஐ. இயக்குநரின் பதில் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கை மீது தனது தரப்பு பதில் அறிக்கையை சி.பி.ஐ. இயக்குநர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார்.
3. ஊழல் குற்றச்சாட்டுக்கு மிக விரைவில் பதில் அளிக்க சி.பி.ஐ. இயக்குநருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் உடனடியாக பதில் அறிக்கை அளிக்கும்படி சி.பி.ஐ. இயக்குநரிடம் சுப்ரீம் கோர்ட்டு இன்று கேட்டு கொண்டுள்ளது.
4. தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை -மத்திய அரசு
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை என மத்திய அரசு கூறி உள்ளது.
5. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனு மீது நாளை விசாரணை
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனு மீது நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறுகிறது.