தேசிய செய்திகள்

தெலுங்கான மாநிலம் விபத்து பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு + "||" + 52 pilgrims dead in horrific Telangana bus accident According to initial reports

தெலுங்கான மாநிலம் விபத்து பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு

தெலுங்கான மாநிலம் விபத்து பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு
தெலுங்கானா மாநிலத்தில் அரசு பஸ் மலைப்பாதையில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 52 ஆக உயர்ந்து உள்ளது
ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் ஜெகதாலா மாவட்டம் சிவராம்பேட்டிலிருந்து ஜாகிதியால்  பஸ்  டெபோவுக்கு வந்து கொண்டிருந்தது. இன்று காலை 11.30 அம்ணியளவில்   கொண்டாகட்டு  மலைபாதையில் பஸ் வரும் போது  டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 23 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானர்கள்.

35 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அருகே உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர் . இதில்  சிகிச்சை பலனின்று  29 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து பலி எண்ணிக்கை 52 ஆக உயர்ந்து உள்ளது.

 பலியானவர்களில் 25 பெண்கள், 8 குழந்தைகள் எனதகவல் வெளியாகி உள்ளது.

விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கி  தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டு உள்ளார்.

விபத்தில் பலியானவர்கள் குடுமபங்களுக்கு  ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஆறுதல் கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கானாவில் ஆட்சியை தக்கவைத்த சந்திரசேகர ராவ் நாளை பதவி ஏற்பு?
தெலுங்கானாவில் ஆட்சியை தக்கவைத்துள்ள சந்திரசேகர ராவ் நாளை பதவி ஏற்றுக் கொள்ளப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கஜ்வெல் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
3. விமானம் புறப்படப்போகும் கடைசி நொடியில் குறுக்கே வந்த கார் ; பெரிய விபத்து தவிர்ப்பு
ஐதராபாத்தில் விமானம் புறப்படப்போகும் கடைசி நொடியில் குறுக்கே கார் ஒன்று வந்துள்ளது. இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
4. காதல் திருமணம் : காதலனை கூலிப்படை வைத்து கொலை செய்த காதலியின் தந்தை
தெலுங்கான மாநிலத்தில் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட நபர் 6 மாதங்கள் கழித்து பெண்ணின் தந்தையால் கொலை செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற குழந்தைக்கு சூடு வைத்த கொடுமைக்கார தாய்
கணவரை பழிவாங்க கள்ளக்காதலனுடன் சேர்ந்து 4 வயது குழந்தைக்கு சூடு வைத்த கொடுமைக்கார தாயை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...