ரபேல் போர் விமான ஒப்பந்தம் பிரதமர் மோடி இந்தியாவிற்கு துரோகம் செய்துவிட்டார் - ராகுல் காந்தி தாக்கு


ரபேல் போர் விமான ஒப்பந்தம் பிரதமர் மோடி இந்தியாவிற்கு துரோகம் செய்துவிட்டார் - ராகுல் காந்தி தாக்கு
x
தினத்தந்தி 21 Sep 2018 4:08 PM GMT (Updated: 21 Sep 2018 4:08 PM GMT)

ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் மோடி இந்தியாவிற்கு துரோகம் செய்துவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.


புதுடெல்லி,

ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் அம்பானியில் ரிலையன்ஸ் நிறுவத்தை பிரான்ஸின் டசால்ட் நிறுவனம்தான் தேர்வு செய்தது, இதில் அரசின் பங்கு எதுவும் கிடையாது என மத்திய அரசு கூறியது.

 இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், பா.ஜனதா இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் இணையதளத்திற்கு பேட்டியளித்து பேசியுள்ள அந்நாட்டு முன்னாள் அதிபர் ஹலாண்டே,  “ஒப்பந்தத்திற்கு ரிலைன்ஸ் நிறுவனத்தை பரிந்துரை செய்தது இந்திய அரசுதான், அம்பானி குரூப்புடன் டசால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையை நடத்தியது. எங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டோம்,” என கூறியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கடுமையான தாக்குதலை தொடங்கியுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, ரபேல் ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். ஹலாண்டேவிற்கு நன்றி, பிரதமர் தனிப்பட்ட முறையில் ஒரு பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தை அம்பானிக்கு வழங்கியுள்ளார் என்பது இப்போது எங்களுக்கு தெரிந்துவிட்டது. பிரதமர், இந்தியாவிற்கு துரோகம் செய்துவிட்டார். இந்திய ராணுவ வீரர்களின் இரத்தத்திற்கு பிரதமர் அவமரியாதை செய்துள்ளார்,” என விமர்சனம் செய்துள்ளார். 


Next Story