ரபேல் விவகாரம்: முன்னாள் அதிபர் ஹாலண்டே கருத்து குறித்து பிரான்சு அரசு விளக்கம்


ரபேல் விவகாரம்:  முன்னாள் அதிபர் ஹாலண்டே கருத்து குறித்து பிரான்சு அரசு விளக்கம்
x
தினத்தந்தி 22 Sep 2018 1:47 AM GMT (Updated: 22 Sep 2018 1:54 AM GMT)

ரபேல் ஒப்பந்த பிரச்சினையில் பிரான்சு முன்னாள் அதிபர் ஹோலண்டே கருத்து குறித்து அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

பாரீஸ்,

ரபேல் போர் விமானங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கு பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்டை (எச்.ஏ.எல்.) புறக்கணித்து விட்டு, ரிலையன்ஸ் நிறுவனத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்தது சர்ச்சை ஆகியுள்ளது.இதுகுறித்து எச்.ஏ.எல். முன்னாள் தலைவர் சுவர்ணா ராஜு அளித்த பேட்டியில், ‘‘நான்காம் தலைமுறை போர் விமானமான, 25 டன் எடையுள்ள சுகோய்–30 ரக போர் விமானங்களையே எச்.ஏ.எல். தயாரிக்கும்போது, ‘ரபேல்’ விமானங்களை எளிதாக தயாரித்து இருக்க முடியும்’’ என்று கூறினார்.

இதையடுத்து, இவ்விவகாரத்தில் பொய் கூறிய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இந்தநிலையில்,  ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசு தான் பரிந்துரை செய்தது என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கூறியது, இந்த சர்ச்சைக்கு மேலும் தீனி போட்டது.

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அந்நாட்டு பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள தகவலின்படி, பிரான்ஸ் நாட்டின் ரபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. பிரான்சு நாட்டுக்கு எந்த ஒரு வேறு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அம்பானி குழுமத்துடன். மட்டுமே இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார். இதன் மூலம் மத்திய மோடி அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், நேற்று பிரெஞ்சு அரசு முன்னாள் அதிபர் ஹாலண்டே கருத்து குறித்து விளக்கம் அளித்தது. பிரான்சு அரசு கூறுகையில், “ இந்தியாவின் தொழிற்துறை கூட்டாளிகள் பற்றிய விஷயத்தில் பிரான்சு அரசு தலையிடவில்லை. ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், தரமான போர்விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவது மட்டுமே எங்களின் பணியாக இருந்தது” என்று தெரிவித்துள்ளது.


Next Story