“ஜெட்லியின் பாஸ் இதையெல்லாம் செய்யமாட்டார்,” ராகுல் காந்தி காட்டம்


“ஜெட்லியின் பாஸ் இதையெல்லாம் செய்யமாட்டார்,” ராகுல் காந்தி காட்டம்
x
தினத்தந்தி 24 Sep 2018 12:00 PM GMT (Updated: 24 Sep 2018 12:00 PM GMT)

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.



புதுடெல்லி,

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டுமே இந்திய அரசு சிபாரிசு செய்தது என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியது இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

 காங்கிரஸ், பா.ஜனதா இடையே கடும் வார்த்தை போர் நீடிக்கிறது. இந்நிலையில் ரபேல் ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் மோடியும், அருண் ஜெட்லியும் பொய்சொல்வதை நிறுத்த வேண்டும், விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் அமேதியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “ ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை குழுவை அமையுங்கள், உண்மை வெளியே வரும். ஆனால் அருண் ஜெட்லியின் பாஸ் பிரதமர் மோடி இதனை செய்ய முடியாது. பிரதமர் மோடி அதிகமாக பேசுகிறார். ஆனால் ரபேல் தொடர்பாகவும், அனில் அம்பானி தொடர்பாகவும் அவர் பேச மறுக்கிறார்,” என கூறியுள்ளார். ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தியின் சூடான கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் அருண் ஜெட்லியும் பதிலளித்து வருகிறார். அவரை குறிப்பிட்டு ராகுல் பதிலளித்துள்ளார்.

Next Story