அமெரிக்காவில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி ஆந்திராவைச்சேர்ந்த எம்.எல்.ஏ உயிரிழப்பு


அமெரிக்காவில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி ஆந்திராவைச்சேர்ந்த எம்.எல்.ஏ உயிரிழப்பு
x
தினத்தந்தி 3 Oct 2018 11:27 AM GMT (Updated: 3 Oct 2018 11:27 AM GMT)

அமெரிக்காவில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி ஆந்திராவைச்சேர்ந்த எம்.எல்.ஏ எம்விவிஎஸ் மூர்த்தி பலியானார்.

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சிறந்த கல்வியாளருமாக விளங்கி வந்த விஷாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.வி.வி.எஸ் மூர்த்தி (வயது 76) , அமெரிக்காவில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததார். அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில், வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த முன்னாள் மாணவர்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்ற எம்.வி.வி.எஸ் மூர்த்தி, கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்கா சென்று இருந்தார். 

அலஸ்கா மாகாணத்தில் உள்ள வனவிலங்குகள் சரணாலயம் ஒன்றை பார்வையிட சென்ற போது, டிரக்கும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கி, உயிரிழந்ததாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது. உயிரிழந்த எம்.வி.வி.எஸ் மூர்த்தியின் உடலை, இந்தியாவுக்கு கொண்டு வரும் பணியில் அமெரிக்காவில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள், அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1983 ஆம் ஆண்டு முதல், தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த எம்.வி.வி.எஸ் மூர்த்தி,  தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரான என்.டி ராமராவுக்கு மிகவும் நெருக்கமானர் என்று அறியப்பட்டவர். விசாகப்பட்டினத்தில் உள்ள காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி என்ற கல்வி நிறுவனத்தை தோற்று வித்த இவர், தனது சொந்த ஊரான கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிலையங்களை தொடங்கி நடத்தி வந்தார். 

விவிவிஎஸ் மூர்த்தி மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல் மந்திரி கே ஈ கிருஷ்ண மூர்த்தி, என்.சின ராஜப்பா, உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Next Story