தேசிய செய்திகள்

பூரி ஜெகநாதர் கோவிலில் போலீசார் ஷூ அணிந்து செல்லக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + No policeman should enter Puri s Jagannath temple with weapons and shoes SC

பூரி ஜெகநாதர் கோவிலில் போலீசார் ஷூ அணிந்து செல்லக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பூரி ஜெகநாதர் கோவிலில் போலீசார் ஷூ அணிந்து செல்லக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பூரி ஜெகநாதர் கோவிலில் போலீசார் ஷூ அணிந்து செல்லக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி, 


ஒடிசாவின் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலில் பக்தர்களுக்கு வரிசை முறையை, கோவில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து கடந்த 3–ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது கோவில் வளாகத்தில் வன்முறை வெடித்தது.  கோவில் நிர்வாக அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்த வன்முறையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காணுமாறு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

 விசாரணையின் போது 3–ந் தேதி நடந்த வன்முறை சம்பவத்தின் போது ஏராளமான போலீசார் ‘ஷூ’ அணிந்தும், ஆயுதங்களுடனும் கோவிலுக்குள் சென்றதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலில் போலீசார் ‘ஷூ’ அணிந்தும், ஆயுதங்களுடனும் செல்லக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக, கோவிலில் நடந்த வன்முறை தொடர்பாக 47 பேரை போலீசார் கைது செய்திருப்பதாக ஒடிசா மாநில அரசு சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. தொடர்புடைய செய்திகள்

1. மேகதாது விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
மேகதாது விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
2. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் கைதிகள் விசாரணையை துரிதப்படுத்தாமல் நீதித்துறையை குறைசொல்வதா?
கைதிகள் மீதான விசாரணையை துரிதப்படுத்தாமல், நீதித்துறையை குறைசொல்வதா? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.
3. அரசு ஊழியர்களுக்கு சாதகமான சட்டப்பிரிவை எதிர்த்து மனு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
ஊழல் புகாரில் சிக்கிய அரசு ஊழியர்கள் மீது விசாரணை நடத்த முன்அனுமதி பெறுவது கட்டாயம் என்ற சட்டப்பிரிவை எதிர்த்து பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.
4. அயோத்தி விவகாரம் காங்கிரஸ் தடுக்கிறது என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு கபில் சிபல் மறுப்பு
அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டை மிரட்டுகிறது என பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு கபில் சிபல் மறுப்பு தெரிவித்துள்ளார்.
5. ஊழல் குற்றச்சாட்டு வழக்கு: சி.பி.ஐ. இயக்குநரின் பதில் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கை மீது தனது தரப்பு பதில் அறிக்கையை சி.பி.ஐ. இயக்குநர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார்.