தேசிய செய்திகள்

தித்லி புயலால் 60 லட்சம் பேர் பாதிப்பு; ஒடிசாவில் வெள்ளம், நிவாரணப் பணிகளில் அரசு தீவிரம் + "||" + Over 60 lakh hit by cyclone, flood in Odisha, govt steps up relief ops

தித்லி புயலால் 60 லட்சம் பேர் பாதிப்பு; ஒடிசாவில் வெள்ளம், நிவாரணப் பணிகளில் அரசு தீவிரம்

தித்லி புயலால் 60 லட்சம் பேர் பாதிப்பு; ஒடிசாவில் வெள்ளம், நிவாரணப் பணிகளில் அரசு தீவிரம்
ஒடிசாவில் தித்லி புயலால் 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புவனேஷ்வர்,

 வங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே வியாழக்கிழமை காலை கரையை கடந்தது. இதன் காரணமாக வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவில் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அம்மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புயலை அடுத்து பெய்த கனமழை காரணமாக ஒடிசாவின் கஞ்சம், கஜாபதி, ராயகாடா உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் ஒடிசா மாநில அரசு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழு, ஒடிசா மாநில சிறப்பு படைப்பிரிவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

பாலசோர் மாவட்ட மக்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் மற்றும் வெள்ளம் என இரட்டை இயற்கை பேரிடரை எதிர்க்கொண்டுள்ள மக்களை வெளியேற்றவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் மாவட்ட நிர்வாகங்களுக்கும் ஒடிசா முதல்வர் நவின் பாட்நாயக் உத்தரவிட்டுள்ளார். நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை செய்துக்கொடுக்கவும், வெள்ளத்தினால் சேதம் அடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை சரிசெய்யவும் உத்தரவிட்டுள்ள நவீன் பாட்நாயக் நிலை குறித்து அவ்வப்போது வீடியோ கால் மூலம் ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார். 


தொடர்புடைய செய்திகள்

1. புயல் தாக்கி ஒரு மாதமாகியும் மின்சாரம் இல்லை குழந்தையை தரையில் படுக்க வைத்து பொதுமக்கள் சாலை மறியல்
புயல் தாக்கி ஒரு மாதமாகியும் மின்சாரம் இல்லாததால் ஆத்திரம் அடைந்த மாங்காடு பகுதி மக்கள் நேற்று குழந்தையை தரையில் படுக்க வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாணவர்களும் பங்கேற்றனர்.
2. கஜா புயல் நிவாரணத்திற்காக அமெரிக்காவில் நடந்த மொய்விருந்தில் ரூ.14¼ லட்சம் வசூல்
கஜா புயல் நிவாரணத்திற்காக அமெரிக்காவில் நடந்த மொய்விருந்தில் ரூ.14¼ லட்சம் வசூலானது.
3. நாகை மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த 43 ஆயிரம் மின்கம்பங்கள் சீரமைப்பு கலெக்டர் சுரேஷ்குமார் தகவல்
நாகை மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த 43 ஆயிரம் மின்கம்பங்கள் சீரமைப்பட்டுள்ளதாக கலெக்டர் சுரேஷ்குமார் கூறினார்.
4. பழைய துணிகளை வழங்கியதால் ஆத்திரம்: நிவாரண பொருட்களை சாலையில் வீசி மறியல்
அதிராம்பட்டினம் அருகே பழைய துணிகளை வழங்கியதால் ஆத்திரமடைந்த மக்கள் நிவாரண பொருட்களை சாலையில் வீசி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
5. கஜா புயலுக்கு முன்பு சேகரித்து வைக்கப்பட்டு இருந்த உப்பு, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி
கஜா புயலுக்கு முன்பு சேகரித்து வைக்கப்பட்டு இருந்த உப்பை, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பணி வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.