பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது


பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
x
தினத்தந்தி 3 Nov 2018 1:19 AM GMT (Updated: 3 Nov 2018 1:19 AM GMT)

பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையும் குறைந்துள்ளது.

சென்னை,

பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து ராக்கெட் வேகத்தில் விலை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் வரலாறு காணாத விலை உயர்வை பெட்ரோல்-டீசல் சந்தித்தன.

இந்த நிலையில் தொடர் உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 வாரங்களாகவே இறங்கு முகத்தில் இருக்கிறது. கடந்த 18-ந் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து  பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வந்தது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

நேற்று பெட்ரோல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.82.26 -க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டு  ரூ.77.85-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் சரிந்து, 82.06 ஆக விற்பனையாகிறது. டீசல் விலை 12 காசுகள் சரிந்து ரூ.77.73 காசுகளாக விற்பனையாகிறது. கடந்த 17 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.4.04-ம், டீசல் விலை ரூ.2.31-ம் குறைந்துள்ளது.

Next Story