‘அர்பன்’ நக்சலைட்களை ஆதரிக்கிறது என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி


‘அர்பன்’ நக்சலைட்களை ஆதரிக்கிறது என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி
x
தினத்தந்தி 9 Nov 2018 12:41 PM GMT (Updated: 9 Nov 2018 12:41 PM GMT)

சொகுசு வாழ்க்கை வாழும் ‘அர்பன்’ நக்சலைட்களை காங்கிரஸ் ஆதரிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.



 சத்தீஷ்காரில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். 

ஜாக்தால்பூரில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நகரங்களில் வாழும் நக்சலைட்கள் குளிர்சாதன அறையில் வசிக்கின்றனர். அவர்கள் வெளிநாடுகளில் படித்தவர்கள். சொகுசு கார்களில் வலம் வருபவர்கள். ஆனால் பழங்குடியின இளைஞர்களை ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் இயக்கி அவர்களது வாழ்க்கையை சீர்குலைப்பவர்கள். இதுபோன்ற நக்சலைட்களை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன்? மக்களுக்கு அக்கட்சி விளக்கம் அளிக்க வேண்டும். நக்சலைட்கள் பிடியில் சிக்கி தவிக்கும் பழங்குடியின மக்களை மீட்கவும், அவர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தவும் பா.ஜனதா பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது என்றார். 

பிரதமர் மோடியின் நகர்புற நக்சலைட்கள் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேப் பேசுகையில், “பிரதமர் மீண்டும் தன்னுடைய வாயால் சுட்டுள்ளார். எங்களுடைய தலைவர்கள் அதிகமானோர் நக்சலைட்களின் தாக்குதல்களால் உயிரிழந்து உள்ளனர். பிரதமர் மோடியின் அற்பமான பிரசாரம் இங்கு பயனளிக்காது. இந்திய வாக்காளர்களின் அறிவை பிரதமர் மோடி மிகவும் குறைத்து மதிப்பிட்டுள்ளார். நகர்ப்புறத்தில் உள்ள ஒரு பிரிவினரை தாக்குகிறார்களானால், என்றால் அவரது தவறான மற்றும் திமிர்பிடித்த செயலாகும்,”என சாடியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில் பிரதமர் மோடி தொழில் அதிபர்களின் உத்தரவை பெற்று அதன்படியே செயல்படுகிறார் என குற்றம் சாட்டினார். 


Next Story