பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார் - புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்


பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார் - புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 11 Nov 2018 11:30 PM GMT (Updated: 11 Nov 2018 9:18 PM GMT)

பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்ல உள்ளார். அங்கு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

லக்னோ,

பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு இன்று (திங்கட்கிழமை) செல்கிறார். அங்கு ரூ.1,571.95 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.

மற்ற நாடுகளை போல நதிகள் வழியாக உள்நாட்டு நீர்வழிபோக்குவரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து துறையின் மைல்கல்லாக கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் எனும் உள்நாட்டு கப்பல் தேசிய நீர்வழி பாதை வழியே பயணித்து கொண்டு வருகிறது.

இந்த கப்பல் இன்று வாரணாசி வந்தடைகிறது. இதனையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சரக்கு கப்பலை வரவேற்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளில் மத்திய மந்திரி நிதின்கட்காரி, மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.


Next Story