கேரளா: சபரிமலையில் 144 தடை உத்தரவு - மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு


கேரளா: சபரிமலையில் 144 தடை உத்தரவு - மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2018 5:43 PM GMT (Updated: 22 Nov 2018 5:43 PM GMT)

சபரிமலையில் 144 தடை உத்தரவு, மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. எனவே சபரிமலையில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றனர். குறிப்பாக நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் சபரிமலையில் நவம்பர் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜை, மகர விளக்கு வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும். இதையொட்டி சபரிமலை கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிலக்கல், பம்பா, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் சபரிமலையில் இன்று இரவுடன் முடிவடைய இருந்த 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலக்கல், பம்பை, சபரிமலை, பத்தனம்திட்டா உள்ளிட்ட பகுதிகளில் மேலும் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



Next Story