ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி 6.5 சதவீதமாக இருக்கும்; ரிசர்வ் வங்கி


ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி 6.5 சதவீதமாக இருக்கும்; ரிசர்வ் வங்கி
x
தினத்தந்தி 5 Dec 2018 11:49 AM GMT (Updated: 5 Dec 2018 11:49 AM GMT)

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி 6.5 சதவீதமாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

மும்பை,

ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஊர்ஜித் பட்டேல் தலைமையிலான நிதி கொள்கை குழு இன்று கூடியது.  இதில், 2018-19ம் ஆண்டிற்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 6.5 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று ரிவர்ஸ் ரெப்போ எனப்படும் வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதத்திலும் மாற்றம் எதுவுமின்றி 6.25 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2019 நிதியாண்டின் 2வது அரையாண்டுக்கான பணவீக்க விகிதம் 2.7-3.2 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.  இந்த பணவீக்க விகிதம் இதற்கு முன் 3.9-4.5 சதவீதமாக இருந்தது.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பட்டேல், கச்சா எண்ணெய் விலைகளின் வீழ்ச்சியால் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் உயரும்.  உள்ளூர் நுகர்வும் கூடும் என்று கூறியுள்ளார்.

Next Story