சட்டீஸ்காரில் நக்சலைட்டுகள் அட்டூழியம்; முன்னாள் கூட்டாளியான கிராம தலைவர் சுட்டு கொலை


சட்டீஸ்காரில் நக்சலைட்டுகள் அட்டூழியம்; முன்னாள் கூட்டாளியான கிராம தலைவர் சுட்டு கொலை
x
தினத்தந்தி 8 Dec 2018 12:59 PM GMT (Updated: 8 Dec 2018 12:59 PM GMT)

சட்டீஸ்காரில் முன்னாள் கூட்டாளியாக இருந்து கிராம பஞ்சாயத்து துணை தலைவரான நபரை நக்சலைட்டுகள் சுட்டு கொன்றுள்ளனர்.

ராய்பூர்,

சட்டீஸ்காரின் நாராயண்பூர் நகரில் காலேபல் கிராமத்தில் வசித்து வந்தவர் மங்கு போட்டை (வயது 39).  இவர் மாவோயிஸ்ட்டுகள் இயக்கத்தில் தீவிரமுடன் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு போலீசார் முன் சரணடைந்து உள்ளார்.

அதன்பின் அவர் கிராம பஞ்சாயத்தின் துணை தலைவரானார்.  இந்த நிலையில் இவ்வருட தொடக்கத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர் மரணமடைந்து விட்டார்.  இதனால் அவரது பொறுப்பினையும் போட்டை சேர்த்து வகித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கிராமத்திற்கு அருகே உள்ள வன பகுதிக்கு வரும்படி அவரை நக்சலைட்டுகள் கூறியுள்ளனர்.  அவரும் அழைப்பினை ஏற்று அங்கு சென்றுள்ளார்.  அவரை நக்சலைட்டுகள் சுட்டு கொன்றுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நக்சலைட்டுகளாக இருந்து சரணடைந்து பின்னர் போலீசாருக்கு தகவல் அளிப்போராக செயல்பட்ட 2 பேரை கடந்த 3ந்தேதி, பஸ்டார் நகரில் நக்சலைட்டுகள் சுட்டு கொன்றனர்.

Next Story