தேசிய செய்திகள்

சிபிஐ, ஆர்பிஐ, தேர்தல் ஆணையம் மீதான பா.ஜனதாவின் தாக்குதலை தடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு - ராகுல் காந்தி + "||" + opposition leaders consensus to stop BJPs assault on our institutions Rahul Gandhi

சிபிஐ, ஆர்பிஐ, தேர்தல் ஆணையம் மீதான பா.ஜனதாவின் தாக்குதலை தடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு - ராகுல் காந்தி

சிபிஐ, ஆர்பிஐ, தேர்தல் ஆணையம் மீதான பா.ஜனதாவின் தாக்குதலை தடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு - ராகுல் காந்தி
சிபிஐ, ஆர்.பி.ஐ, தேர்தல் ஆணையம் மீதான பா.ஜனதாவின் தாக்குதலை தடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசுடன் அதிகார மோதல் தொடர்பான பிரச்சினை இருந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் திடீரென பதவி விலகியுள்ளார். ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் சுய அதிகாரம் பிரச்சனையை பாராளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது. பா.ஜனதாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்ற நிலையில் இந்த ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு அனைத்து அரசு முகமைகளை சிதைக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் இந்நகர்வு ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்தும் என பார்க்கப்படுகிறது. 

மத்திய அரசுக்கும் உர்ஜித் படேலுக்கும் இடையே உரசல் என செய்தி வெளியாகியதுமே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “அவரை (பிரதமர் மோடி) எதிர்த்து நில்லுங்கள் படேல் (உர்ஜித் படேல்) நாட்டைக் காப்பாற்றுங்கள்”  என கேட்டுக்கொண்டிருந்தார்.  

ராகுல் காந்தி கருத்து

இப்போது உர்ஜித் படேல் ராஜினாமா செய்தது குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது உர்ஜித் படேல் ராஜினாமா செய்தி எங்களுக்கு தெரியவந்தது. மத்திய அரசுடன் இனி இணைந்து பணியாற்ற முடியாது என்று அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது. அப்போது சிபிஐ, ஆர்.பி.ஐ. தேர்தல் ஆணையம் மற்றும் அரசியலமைப்பு போன்ற நம்முடைய அரசு நிறுவனங்கள் மீதான பா.ஜனதாவின் தாக்குதலை தடுத்து நிறுத்தவேண்டும் என்று ஒருமித்த சம்மதம் தெரிவிக்கப்பட்டது,” என்று கூறியுள்ளார் என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவுக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம் - கண்டனம்
அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்த வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவுக்கு அபராதம் விதித்து கடும் கண்டனத்தையும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்து உள்ளது.
2. தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் எந்திரத்தின் செயல்விளக்கம்
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் எந்திரத்தின் செயல்விளக்கத்தை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
3. 2019 தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள்தான் போலி செய்திகளை பரப்புகின்றன - வாட்ஸ் அப் பகீர் தகவல்
2019 தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள்தான் போலி செய்திகளை பரப்புகின்றன என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
4. சிபிஐ பா.ஜனதாவின் தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது -அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
சிபிஐ பா.ஜனதாவின் தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
5. சிபிஐ புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா பொறுப்பேற்பு
சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...