தேசிய செய்திகள்

அனைத்து தலைமைத்துவ தேர்வுகளிலும் ராகுல்காந்தி பாஸ்! வீரப்பமொய்லி + "||" + Rahul Gandhi passed all leadership tests says M Veerappa Moily

அனைத்து தலைமைத்துவ தேர்வுகளிலும் ராகுல்காந்தி பாஸ்! வீரப்பமொய்லி

அனைத்து தலைமைத்துவ தேர்வுகளிலும் ராகுல்காந்தி பாஸ்! வீரப்பமொய்லி
அனைத்து தலைமைத்துவ தேர்வுகளிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாஸ் ஆகிவிட்டார் என காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்பமொய்லி கூறியுள்ளார்.
ஐதராபாத்,  

சட்டசபை தேர்தல் நடந்த 5 மாநிலங்களில் சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. ராகுல்காந்தியை பப்பு என்று பா.ஜனதாவினர் கேலி செய்த நிலையில் பெரும் வெற்றியை தனதாக்கியுள்ளார். இதுதொடர்பாக  காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்பமொய்லி பேசுகையில், அனைத்து தலைமைத்துவ தேர்வுகளிலும் காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி பாஸ் ஆகிவிட்டார் என கூறியுள்ளார்.  

 வீரப்பமொய்லி கூறுகையில், பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா கூட்டணி அரசின் தவறான நிர்வாகத்தை மக்கள் நீண்டகாலமாக பொறுத்து வந்தனர். ஆனால் சோனியா மற்றும் ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் பா.ஜனதாவினர் தாக்கி பேசியதை மக்களால் பொறுக்க முடியவில்லை. பிரதமர் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியையே இந்த வெற்றி காட்டுகிறது. இந்த வெற்றி காங்கிரசின் வெற்றி மட்டுமின்றி அதன் தலைமைக்கும் கிடைத்த வெற்றியாகும் . இதன் மூலம் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி நாட்டின் தலைவராக அதாவது பிரதமராக உருவெடுப்பார் என கூறியுள்ளார். 

மேலும் ராகுல்காந்தி அனைத்து தலைமைத்துவ தகுதி தேர்வுகளிலும் வெற்றி பெற்று மிகப்பெரும் தலைவராக உருவெடுத்து இருப்பதாகவும்  வீரப்ப மொய்லி கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
ராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் என்று மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
2. ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தல்
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்று காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துவதாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
3. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான் ராமர்கோவில் கட்டப்படும் -ஹரிஷ் ராவத்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான் ராமர் கோவில் கட்டப்படும் என உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் கூறியுள்ளார்.
4. டெல்லி, பஞ்சாப், அரியானாவில் தனித்தே போட்டி ஆம் ஆத்மி அறிவிப்பு
டெல்லி, பஞ்சாப், அரியானாவில் தனித்தே போட்டியிடுவோம் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
5. எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து கடிதம்
எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மம்தா பானர்ஜிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.