சட்டசபை தேர்தலில் வெற்றி: 5 எம்.பி.க்கள் ராஜினாமா


சட்டசபை தேர்தலில் வெற்றி: 5 எம்.பி.க்கள் ராஜினாமா
x
தினத்தந்தி 27 Dec 2018 10:30 PM GMT (Updated: 27 Dec 2018 9:09 PM GMT)

மத்திய பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களான மனோகர் உந்த்வால் மற்றும் நரேந்திர சிங் ஆகிய இருவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

புதுடெல்லி,

சத்தீஸ்கார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மக்களவை உறுப்பினர்களான தம்ராத்வாஜ், ராகுல்சர்மா மற்றும் ஹரீஸ் சந்திரமீனா ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து அவர்கள் 5 பேரும் தங்களின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.


Next Story