பெண் கற்பழிப்பு தீர்ப்பு குறித்து சர்ச்சை கருத்து: ஒடிசா மந்திரி ராஜினாமா


பெண் கற்பழிப்பு தீர்ப்பு குறித்து சர்ச்சை கருத்து: ஒடிசா மந்திரி ராஜினாமா
x
தினத்தந்தி 6 Jan 2019 9:45 PM GMT (Updated: 6 Jan 2019 8:10 PM GMT)

பெண் கற்பழிப்பு தீர்ப்பு குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த ஒடிசா மந்திரி ராஜினாமா செய்தார்.

புவனேஷ்வர்,

கடந்த 2011-ம் ஆண்டு ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் பெண் ஒருவர், மர்ம கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்து சமீபத்தில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இது பற்றி கருத்து தெரிவித்த ஒடிசா விவசாய மந்திரி பிரதீப் மகாரதி, கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்பதாக கூறினார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து, அவர் மந்திரி பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த எதிர்ப்பின் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால், பிரதீப் மகாரதி நேற்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அலுவலகத்திற்கு அவர் அனுப்பி வைத்தார்.

Next Story