டெல்லி-பாகல்பூர் எக்ஸ்பிரெசின் சங்கிலியை இரவில் இழுத்து நிறுத்தி கொள்ளை அடித்த கும்பல்


டெல்லி-பாகல்பூர் எக்ஸ்பிரெசின் சங்கிலியை இரவில் இழுத்து நிறுத்தி கொள்ளை அடித்த கும்பல்
x
தினத்தந்தி 10 Jan 2019 9:51 AM GMT (Updated: 10 Jan 2019 9:51 AM GMT)

டெல்லி-பாகல்பூர் எக்ஸ்பிரெஸ் ரெயிலில் இரவில் சங்கிலியை இழுத்து நிறுத்தி பயணிகளின் விலை மதிப்புள்ள பொருட்களை கும்பல் ஒன்று கொள்ளை அடித்து சென்றது.

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து பாகல்பூர் நோக்கி எக்ஸ்பிரெஸ் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது.  இந்த ரெயில் கியூல் மற்றும் ஜமால்பூர் பகுதிகளுக்கு இடையே சென்று கொண்டிருந்தது.  இந்த நிலையில், தனாவ்ரி என்ற இடத்தில் இரவில் ஆயுதமேந்திய கொள்ளை கும்பல் ஒன்று ரெயிலின் சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தியுள்ளது.

இதன்பின்னர் பயணிகளிடம் இருந்து விலை மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.  அவற்றின் மதிப்பு ரூ.2.75 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை.  இதுபற்றி போலீசாரிடம் பயணிகள் 10 பேர் புகார் அளித்து உள்ளனர்.  

அவர்களை பிடிக்க உள்ளூர் போலீசார் மற்றும் அரசு ரெயில்வே போலீசாருடன் இணைந்து ரெயில்வே போலீஸ் படையினரும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.  இந்த கும்பலை பிடிக்க தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

Next Story