தேசிய செய்திகள்

மொபைல் போனில் 10 நாட்கள் தொடர்ந்து கேம் விளையாடியவருக்கு நேர்ந்த கதி? + "||" + Fitness trainer in Jammu loses mental balance after playing PUBG for 10 days

மொபைல் போனில் 10 நாட்கள் தொடர்ந்து கேம் விளையாடியவருக்கு நேர்ந்த கதி?

மொபைல் போனில் 10 நாட்கள் தொடர்ந்து  கேம் விளையாடியவருக்கு நேர்ந்த கதி?
மொபைல் போனில் 10 நாட்கள் தொடர்ந்து கேம் விளையாடியவர் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ஸ்மார்ட் போன்களில் வீரர் தெரியாத   போர் மைதானம் எனப்படும் PlayerUnknown’s Battlegrounds, also called as PUBG PUBG என்ற விளையாட்டு 2018 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விளையாட்டாக உள்ளது. உலகம் முழுவதும் இதனை 20 கோடி பேர் விளையாடி வருகிறார்கள். 

இந்த விளையாட்டிற்கு அடிமையான உடற்பயிற்சி ஆலோசகர் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்தியாவில், ஜம்மு-வை சேர்ந்த உடற்பயிற்சி ஆலோசகர் ஒருவர் 10 நாட்களுக்கு முன்பு அவரது ஸ்மார்ட்போனில் PUBG என்ற விளையாட்டை இன்ஸ்டால் செய்து உள்ளார். 

முதல்முறையாக விளையாடிய அவருக்கு அந்த விளையாட்டு மிகவும் பிடித்து விட்டது. எனவே கடந்த பத்து நாள்களாக ஓய்வு இல்லாமல் விளையாடி உள்ளார். இதில் மனநலம் பாதிக்கப்பட்ட அவர், தன்னை தானே தாக்கி கொண்டுள்ளார்.

இதை தொடர்ந்து அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

PUBG விளையாட்டு பிரச்சினைக்கு ஆளாகும் சம்பவம் ஐம்முவில் முதல் முறை இல்லை என்றும், அந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் உள்ள பட்காம் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2. காஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி 7 பேரை மீட்கும் பணி தீவிரம்
காஷ்மீர் பனிச்சரிவுக்குள் 10 பேர் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதில் 3 பேர் உடல் மீட்கப்பட்டு உள்ளது. மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
3. உள்ளூர் போராளிகள் மண்ணின் மைந்தர்கள் -மெகபூபா முப்தி
உள்ளூர் போராளிகள் இந்த மண்ணின் மைந்தர்கள் என காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி கூறி உள்ளார்.
4. இந்திய எல்லையில் கடந்த 2 நாட்களில் அத்துமீறி 4 முறை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்
எல்லைக்கு அப்பால் இருந்து கடந்த 2 நாட்களில் பாகிஸ்தான் ராணுவம், நான்கு முறை அத்துமீறித் தாக்குதல் நடத்தியிருப்பதாக, இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
5. 2014-ம் ஆண்டிலிருந்து ஜம்மு காஷ்மீரில் 838 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - மத்திய அரசு
2014-ம் ஆண்டிலிருந்து ஜம்மு காஷ்மீரில் 838 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.