தேசிய செய்திகள்

பிரபல இந்திப்பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மீது பாலியல் புகார் + "||" + Sexual complaint against famous Hindi director Rajkumar Hirani

பிரபல இந்திப்பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மீது பாலியல் புகார்

பிரபல இந்திப்பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மீது பாலியல் புகார்
பிரபல இந்திப்பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,

பிரபல இந்திப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான ராஜ்குமார் ஹிரானி, முன்னாபாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். கடந்த ஆண்டு ‘சஞ்சு’ என்ற இந்திப்படத்தை எடுத்தார். அதில், உதவி இயக்குனராக பணியாற்றிய ஒரு பெண், தற்போது ராஜ்குமார் ஹிரானி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.


‘சஞ்சு’ படத்தில் பணியாற்றியபோது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை தன்னை பாலியல் ரீதியாக ஹிரானி பயன்படுத்திக் கொண்டதாக அப்பெண் ஒரு இணையதளத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக படத்தின் இணை தயாரிப்பாளர் விது வினோத் சோப்ராவுக்கு ஏற்கனவே இமெயில் மூலம் புகார் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு பொய்யானது, தனது நற்பெயரை கெடுக்கும் தீயநோக்கம் கொண்டது என்று ராஜ்குமார் ஹிரானி மறுத்துள்ளார். 2 மாதத்துக்கு முன்பு, இந்த புகாரை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், அதை சட்டரீதியான ஒரு குழுவுக்கு அனுப்புமாறு நான் கூறியதை கேட்காமல் அப்பெண் ஊடகங்களுக்கு சென்றிருப்பதாகவும் அவர் கூறினார்.