சபரிமலை விவகாரம்: மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 22ஆம் தேதி இல்லை


சபரிமலை விவகாரம்: மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 22ஆம் தேதி இல்லை
x
தினத்தந்தி 15 Jan 2019 6:16 AM GMT (Updated: 15 Jan 2019 6:37 AM GMT)

சபரிமலை விவகாரம் தொடர்பான மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 22ஆம் தேதி இல்லை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தீர்ப்பை எதிர்த்து அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதி வழங்கி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

நீதிபதி இந்து மல்ஹோத்ரா விடுப்பில் இருப்பதால் சபரிமலை விவகாரம் தொடர்பான மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 22ஆம் தேதி நடைபெறாது  என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.


Next Story