மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 147 புள்ளிகள் உயர்வு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 147 புள்ளிகள் உயர்வு
x
தினத்தந்தி 17 Jan 2019 5:25 AM GMT (Updated: 2019-01-17T10:55:23+05:30)

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் குறியீடு 147 புள்ளிகள் உயர்ந்து உள்ளது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் மதிப்பு 147 புள்ளிகள் உயர்ந்து 36,393.45 ஆக உள்ளது.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிஃப்டி குறியீடு 24.50 புள்ளிகள் உயர்ந்து 10,914.80 ஆக உள்ளது.

சென்செக்ஸ் அளவில் எம். அண்டு எம்., டி.சி.எஸ்., எச்.டி.எப்.சி., பவர் கிரிட் மற்றும் ஆர்.ஐ.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் வர்த்தகத்தில் பெரிய அளவில் லாபத்துடன் தொடங்கின.

இதேவேளையில் யெஸ் வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி, ஐ.டி.சி. மற்றும் எச்.யூ.எல். ஆகியவை நஷ்டத்துடன் இருந்தன.

Next Story