11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 31–ந் தேதிக்கு ஒத்திவைப்பு


11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 31–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 17 Jan 2019 10:50 PM GMT (Updated: 17 Jan 2019 10:50 PM GMT)

11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 31–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்ததால் அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் விசாரணையும் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்குகளில் சக்கரபாணி தரப்பில் மூத்த வக்கீல் கபில்சிபல், தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, வக்கீல் ராஜா செந்தூர்பாண்டி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், முகுல் ரோத்தகி, குரு கிருஷ்ண குமார், வக்கீல்கள் கவுதம் குமார், பாலாஜி சீனிவாசன், சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மணிந்தர் சிங் ஆகியோர் தங்கள் வாதங்களை முடித்து உள்ளனர்.

மனுதாரர்கள் தரப்பில் மீண்டும் நேற்று இரண்டாவது சுற்று எதிர் வாதங்கள் தொடருவதாக இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வில் விசாரணை தொடங்கியதும் வருகிற 31–ந் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.


Next Story