முழு ஆரோக்கியத்துடன் உள்ளதாக அமித் ஷா டுவிட்டர் பதிவு


முழு ஆரோக்கியத்துடன் உள்ளதாக அமித் ஷா டுவிட்டர் பதிவு
x
தினத்தந்தி 20 Jan 2019 5:47 PM GMT (Updated: 20 Jan 2019 5:47 PM GMT)

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அமித் ஷா, தான் முழு ஆரோக்கியத்துடன் உள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

முன்னதாக லோக்சபா தேர்தலுக்காக தீவிரமாக செயல்பட்டுவந்த நிலையில், கடந்த 16-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நெஞ்சு எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சினை காரணமாக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அவர் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

மருத்துவமனை இயக்குநர் ரன்வீர் தலைமையிலான மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறியதை அடுத்து அவர் இன்று காலை 10.20 மணிக்கு மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு, வீடு திரும்பினார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘ இறைவன் அருளால் நான் முழு ஆரோக்கியத்துடன் உள்ளேன். ஆஸ்பத்திரியில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.



Next Story