அரசு வேலை கிடைத்த ஆத்திரத்தில் சகோதரர் வீட்டுக்கு தீ வைப்பு; 4 பேர் பலி


அரசு வேலை கிடைத்த ஆத்திரத்தில் சகோதரர் வீட்டுக்கு தீ வைப்பு; 4 பேர் பலி
x
தினத்தந்தி 4 Feb 2019 6:37 PM IST (Updated: 4 Feb 2019 6:37 PM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை கிடைத்த ஆத்திரத்தில் சகோதரரின் வீட்டுக்கு தீ வைத்ததில் 4 பேர் பலியாகினர்.

மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் மதன்தோலா கிராமத்தில் வசித்து வந்த சகோதரர்கள் பிகாஷ் (வயது 32), மக்கான் மொண்டல் (வயது 30) மற்றும் கோபிந்தா (வயது 28).  மற்றொரு சகோதரர் லட்சுமண் டெல்லியில் வசிக்கிறார்.  இவர்கள் 3 பேரும் விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

தேசிய தன்னார்வலர் படையில் பணியாற்றி வந்த கெத்து மொண்டல் சில காலங்களுக்கு முன் பணியில் மரணம் அடைந்து விட்டார்.  இதனால் கருணை அடிப்படையில் கோபிந்தாவுக்கு இந்த அரசு வேலை கிடைத்துள்ளது.  இதற்கு சகோதரர் பிகாஷ் உதவியுள்ளார்.  இது மக்கானுக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், அவர்களது வீட்டின் இரு அறைகளில் மக்கான் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.  இந்த சம்பவத்தில் பிகாஷ், கோபிந்தா மற்றும் கோபிந்தாவின் 2 மகள்கள் (3 மற்றும் ஒன்றரை வயது) ஆகியோர் உயிரிழந்து விட்டனர்.

பிகாஷின் மனைவி, மகன், மகள் மற்றும் கோபிந்தாவின் மனைவி ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சகோதரர்களின் தாய் மற்றொரு அறையில் தூங்கி உள்ளார்.  இதனால் அவர் காயங்கள் எதுவுமின்றி தப்பித்து விட்டார்.

இந்த சம்பவத்தினை அடுத்து மக்கான் தப்பியோடி விட்டார்.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story