தேசிய செய்திகள்

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாயுடு மற்றும் மம்தா சிறை செல்ல நேரிடும்; சட்டீஸ்கார் முன்னாள் முதல் மந்திரி + "||" + Mamata and Naidu will go to jail if Modi comes to power once again: Dr Raman Singh

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாயுடு மற்றும் மம்தா சிறை செல்ல நேரிடும்; சட்டீஸ்கார் முன்னாள் முதல் மந்திரி

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாயுடு மற்றும் மம்தா சிறை செல்ல நேரிடும்; சட்டீஸ்கார் முன்னாள் முதல் மந்திரி
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சந்திரபாபு நாயுடு மற்றும் மம்தா பானர்ஜி சிறைக்கு செல்ல நேரிடும் என சட்டீஸ்கார் முன்னாள் முதல் மந்திரி கூறியுள்ளார்.
ராஞ்சி,

சட்டீஸ்கார் முன்னாள் முதல் மந்திரி ரமன் சிங் கட்சி கூட்டமொன்றில் இன்று பேசும்பொழுது, மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தொண்டர்களுக்கு மம்தா பானர்ஜி செய்து வரும் கொடுமைகள் பற்றி ஒவ்வொருவருக்கும் தெரியும்.

அங்கு சமீபத்தில் சி.பி.ஐ. மற்றும் கொல்கத்தா போலீசார் தொடர்புடைய சம்பவங்கள் முதல் மந்திரி பானர்ஜியின் உத்தரவின்படியே நடந்துள்ளது என்று பேசினார்.

வருகிற நாடாளுமன்ற தேர்தல் ஊழல் சக்திகளுக்கு எதிரான தர்மயுத்தம் என குறிப்பிட்ட அவர், நாயுடு மற்றும் மம்தா ஆகியோர் பிரதமர் மோடிக்கு சவால் விட முயற்சிக்கின்றனர்.  அவர் மீண்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஆட்சிக்கு வந்தால் அனைத்து ஊழல்களும் வெளிவரும்.  அவர்கள் இருவரும் சிறைக்கு செல்ல வேண்டி வரும் என கூறியுள்ளார்.

நாட்டை கொள்ளையடித்த மற்றும் ஊழலுடன் தொடர்புடைய காங்கிரஸ், இடதுசாரி, சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகளிடையே பாரதீய ஜனதா கட்சியின் எழுச்சி அமைதியின்மையை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுத்தரும் - ஆய்வில் தகவல்
விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுத்தரும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் வலுவான நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்
தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் வலுவான நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
3. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி
சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
4. பிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது
பிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. டெல்லி - வாரணாசி இடையே வந்தேபாரத் விரைவு ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
டெல்லி - வாரணாசி இடையே வந்தேபாரத் விரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...