2-வது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ராபர்ட் வதேரா ஆஜர்


2-வது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ராபர்ட் வதேரா ஆஜர்
x
தினத்தந்தி 13 Feb 2019 6:46 AM GMT (Updated: 13 Feb 2019 7:09 AM GMT)

2-வது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா ஆஜர் ஆகியுள்ளார்.

ஜெய்பூர், 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் மாவட்டத்தில் நில மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக ஜெய்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ராபர்ட் வதேரா ஆஜர் ஆனார். அவரிடம் ஒன்பது மணி நேரம் விசாரணை நடைபெற்றது.  வதேராவின் தாயார் மவுரினிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். 

இந்த நிலையில், 2-வது நாளாக விசாரணைக்காக, ராபர்ட் வதேரா காலை 10.26 மணிக்கு ஜெய்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரது வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 


Next Story