ஜம்முவில் செல்போன் இணைய தள சேவை தற்காலிகமாக நிறுத்தம்


ஜம்முவில் செல்போன் இணைய தள சேவை தற்காலிகமாக நிறுத்தம்
x
தினத்தந்தி 15 Feb 2019 3:21 AM GMT (Updated: 15 Feb 2019 3:21 AM GMT)

ஜம்முவில் செல்போன் இணைய தள சேவை தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர், 

காஷ்மீர் மாநிலத்தில், நேற்று மாலை 78 வாகனங்களில் சென்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  துணை ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது,  அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடி குண்டுகள் நிரப்பிய சொகுசு காரில் வந்த பயங்கரவாதி ஒருவன், காரை பேருந்து மீது மோதி வெடிக்கச்செய்தான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின.

 அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன. தாக்குதலுக்கு உள்ளான பஸ்சில் பயணம் செய்த வீரர்கள் அனைவரும் உடல் சிதறிப்போய் விழுந்தனர். நெஞ்சை உறைய வைக்கும் இந்த தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பல வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. 

பயங்கரவாதிகள்  தாக்குதலை தொடர்ந்து, நேற்று தெற்கு காஷ்மீர் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையவேகம் 2 ஜியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ஜம்முவில் செல்போன் இணையதளசேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பல்வேறு அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story