பிப்.21 ல் அரசுமுறைப் பயணமாக தென்கொரியா செல்கிறார் பிரதமர் மோடி


பிப்.21 ல் அரசுமுறைப் பயணமாக தென்கொரியா செல்கிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 15 Feb 2019 5:50 AM GMT (Updated: 2019-02-15T11:20:22+05:30)

பிரதமர் மோடி, அரசுமுறைப் பயணமாக வரும் 21ஆம் தேதி தென்கொரியாவுக்கு செல்கிறார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி, அரசுமுறைப் பயணமாக வரும் 21ஆம் தேதி தென்கொரியாவுக்கு செல்கிறார்.  இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி பிப்.21-ல் தென்கொரியா செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் மூன் ஜேயை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் தென்கொரிய தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து பேசுகிறார். 

இரு நாட்டின் நல்லுறவு, பிராந்திய விவகாரம், சர்வதேச பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயல்படுவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது. 

22ம் தேதி சியோல் அமைதி  விருது கலாச்சார அறக்கட்டளை சார்பில் நடக்கும் விருது வழங்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பிரதமர்  மோடியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் 2018ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் அந்த விருதை  மோடி பெற்றுக் கொள்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story