தேசிய செய்திகள்

காஷ்மீரில் வர்த்தக விமானத்தில் துணை ராணுவ படையினர் பயணிக்க மத்திய அரசு அனுமதி + "||" + Jawans of CRPF, other forces can now take commercial flights to Kashmir Valley: MHA

காஷ்மீரில் வர்த்தக விமானத்தில் துணை ராணுவ படையினர் பயணிக்க மத்திய அரசு அனுமதி

காஷ்மீரில் வர்த்தக விமானத்தில் துணை ராணுவ படையினர் பயணிக்க மத்திய அரசு அனுமதி
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பணிபுரியும் துணை ராணுவ படையினர் வர்த்தக விமானத்தில் பயணிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.
புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி கடந்த வாரம் தற்கொலை தாக்குதல் நடத்தினான்.  இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பணிபுரியும் மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் பிற துணை ராணுவ படையினர் வர்த்தக விமானத்தில் பயணிக்க மத்திய உள்விவகார துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அவர்கள் பணியில் சேருவதற்கோ அல்லது விடுமுறையில் செல்வதற்கோ டெல்லி-ஸ்ரீநகர், ஸ்ரீநகர்-டெல்லி, ஜம்மு-ஸ்ரீநகர் மற்றும் ஸ்ரீநகர்-ஜம்மு ஆகிய பிரிவுகளில் வான்வழியே விமான பயணம் மேற்கொள்ளலாம்.

இந்த முடிவால் கான்ஸ்டபிள், தலைமை கான்ஸ்டபிள் மற்றும் உதவி ஆய்வாளர் என இதுவரை பயன் வழங்கப்படாதோர் உள்ளிட்ட 7.8 லட்சம் துணை ராணுவ படையினர் உடனடி பலனை பெறுவர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் வழக்கு; மத்திய அரசின் எதிர்ப்பு பற்றிய தீர்ப்பு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ரபேல் வழக்கில், மத்திய அரசின் எதிர்ப்பு பற்றிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
2. தமிழ்நாடு சமூக நலத்துறைக்கு மத்திய அரசு விருது
தமிழ்நாடு சமூக நலத்துறைக்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டது.
3. மத்திய அரசு முதன்முறையாக 20 ரூபாய்க்கான நாணயம் வெளியிட முடிவு
மத்திய அரசு முதன்முறையாக 20 ரூபாய்க்கான நாணயம் வெளியிட முடிவு செய்துள்ளது.
4. ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்துக்கு தடை; மத்திய அரசின் அகந்தைக்கு உதாரணம் மெகபூபா கண்டனம்
ஜமாத் -இ -இஸ்லாமி ஜம்மு மற்றும் காஷ்மீர் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.
5. மத்திய மந்திரி அலுவாலியா ஆஸ்பத்திரியில் அனுமதி
உடல் நலக்குறைவு காரணமாக மத்திய மந்திரி அலுவாலியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.