ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் தலைமை அதிகாரி சாந்தா கோச்சார் வெளிநாட்டுக்கு தப்புவதை தடுக்க சி.பி.ஐ. அதிரடி


ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் தலைமை அதிகாரி சாந்தா கோச்சார் வெளிநாட்டுக்கு தப்புவதை தடுக்க சி.பி.ஐ. அதிரடி
x
தினத்தந்தி 22 Feb 2019 9:38 PM GMT (Updated: 22 Feb 2019 9:38 PM GMT)

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் தலைமை அதிகாரி சாந்தா கோச்சார் வெளிநாட்டுக்கு தப்புவதை தடுக்க சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக சாந்தா கோச்சார் இருந்தபோது, வீடியோகான் குழுமத்துக்கு ரூ.1,875 கோடி கடன்கள் வழங்கப்பட்டன. இதில் விதிமீறல்கள் நடந்ததுடன், இவற்றில் பெரும்பகுதி, வாராக்கடன் ஆகிவிட்டதால், வங்கிக்கு ரூ.1,730 கோடி இழப்பு ஏற்பட்டது. எனவே, சாந்தா கோச்சார், அவருடைய கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் நிர்வாக இயக்குனர் வேணுகோபால் தூத் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

இவ்வழக்கில், சாந்தா கோச்சாரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை. அதற்குள் அவர் உள்பட 3 பேரும் வெளி நாட்டுக்கு தப்பிவிடக்கூடாது என்பதற்காக, 3 பேருக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீசை சி.பி.ஐ. பிறப்பித்துள்ளது.

இதன்மூலம், அவர்கள் வெளிநாடு செல்ல முயன்றால், விமான நிலைய குடியேற்றப்பிரிவு அதிகாரிகள், சி.பி.ஐ.க்கு தகவல் தெரிவிப்பதுடன், அவர் களை தடுத்து நிறுத்துவார்கள்.


Next Story