காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு; 2 தீவிரவாதிகள் பிடிபட்டனர் என தகவல்


காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு; 2 தீவிரவாதிகள் பிடிபட்டனர் என தகவல்
x
தினத்தந்தி 1 March 2019 6:37 AM IST (Updated: 1 March 2019 6:51 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் பிடிபட்டனர் என தகவல் வெளிவந்து உள்ளது.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அங்கு நடந்த தேடுதல் வேட்டையில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.  இதில் 2 முதல் 3 தீவிரவாதிகள் பிடிபட்டு உள்ளனர் என தகவல் வெளியானது.  அவர்களை பற்றிய அடையாளங்கள் உள்ளிட்ட விவரங்கள் வெளிவரவில்லை.

Next Story