தேசிய செய்திகள்

மத்திய அரசின் தடைக்கு பின் ஜமாத்-இ-இஸ்லாமி இயக்க தலைவர்களின் சொத்துகள் முடக்கம் + "||" + After Centre ban, several properties linked to JeI leaders sealed in Kashmir: police

மத்திய அரசின் தடைக்கு பின் ஜமாத்-இ-இஸ்லாமி இயக்க தலைவர்களின் சொத்துகள் முடக்கம்

மத்திய அரசின் தடைக்கு பின் ஜமாத்-இ-இஸ்லாமி இயக்க தலைவர்களின் சொத்துகள் முடக்கம்
காஷ்மீரில் மத்திய அரசின் தடையை தொடர்ந்து ஜமாத்-இ-இஸ்லாமி இயக்க தலைவர்களின் சொத்துகள் அதிகாரிகளால் இன்று முடக்கப்பட்டு உள்ளன.
ஸ்ரீநகர்,

காஷ்மீரில் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இதன்பின்னர் காஷ்மீரில் பிரிவினைவாத கட்சியை சேர்ந்த 5 தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் போலீசார் பிரிவினைவாத கட்சியின் தலைவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.  இதில் ஏறக்குறைய 100 பேர் கைது  செய்யப்பட்டனர். அதில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் அப்துல் ஹமிது பியாஸ், செய்தித்தொடர்பாளர் ஜாஹித் அலி ஆகியோரும் அடங்குவர்.

ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு கடந்த காலங்களில் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறி கடந்த 1990களில் தடை செய்யப்பட்டு பின்னர் 1995ம் ஆண்டு தடை நீக்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், ஜமாத்-இ-இஸ்லாமி ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கும், தீவிரவாத அமைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், மாநிலத்தில் பிரிவினைவாத செயல்களை தூண்டிவிடுவதிலும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த அமைப்புக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், "ஜம்மு காஷ்மீரில்  செயல்பட்டு வந்த ஜமாத்-இ-இஸ்லாமி ஜம்மு அன்ட் காஷ்மீர் அமைப்பு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் தடை செய்யப்படுகிறது. தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு இருப்பதும், தீவிரவாத செயல்களுக்கு உதவி செய்வதும், மாநிலத்தில் பிரிவினையை தூண்டிவிடவும் முயல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த தேசத்தில் பிரிவினைக்கு முயன்று, தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளுடன் கைகோர்த்து செயல்படுகிறது. இதனால், மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஆதலால், ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பை தடை செய்கிறோம்" என தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் பல தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட சொத்துகள் நகரில் பல்வேறு பகுதிகளில் முடக்கப்பட்டு உள்ளன.  வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த இயக்கத்தின் தலைவர்களது அசையும் மற்றும் அசையா சொத்துகள் பட்டியலை மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள் கேட்டுள்ளனர்.

எனினும், இந்த இயக்கத்தின் மீது மத்திய அரசு விதித்த தடையால் இந்த நடவடிக்கையா அல்லது பணமோசடி வழக்குகள் மீது தேசிய புலனாய்வு முகமை நடத்தி வரும் விசாரணையால் இந்த நடவடிக்கையா என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 27ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீட்டிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 27ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை நேற்று 10-வது நாளாக நீடித்தது.
2. கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை வழங்குவதற்கு தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு; தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை வழங்குவதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.
3. தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு குறித்து விமர்சித்த அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சிக்கு 3 மாதம் தடை
சமீபத்தில் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் அர்ஜென்டினா அணி 0–2 என்ற கோல் கணக்கில் போட்டியை நடத்தும் பிரேசிலிடம் தோல்வி கண்டது.
4. 10 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு புதுச்சேரியில் நாளை முதல் தடை - அரசு அதிரடி அறிவிப்பு
புதுவையில் பைகள், குவளைகள், தட்டுகள் உள்பட 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நாளை முதல் அமலுக்கு வருவதாக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
5. தடை காலம் முடிகிறது: குளச்சல் விசைப்படகு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்கிறார்கள்
தடை காலம் இன்று முடிவதையொட்டி, குளச்சல் விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்கிறார்கள்.