காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 வீரர்கள், 2 போலீசார் பலி


காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 வீரர்கள், 2 போலீசார் பலி
x
தினத்தந்தி 3 March 2019 8:43 AM IST (Updated: 3 March 2019 8:43 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 வீரர்கள், 2 போலீசார் பலியாகி உள்ளனர்.

காஷ்மீர்,

காஷ்மீரின் பாபாகண்ட் நகரில் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.  இதனை தொடர்ந்து அங்கு சென்ற வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.  தொடர்ந்து 3வது நாளாக தீவிரவாதிகளுடன் சண்டை நடந்து வருகிறது.  இதில் மத்திய ரிசர்வ் போலீசார் 2 பேர் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் 2 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.  தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.

Next Story