”உங்கள் ஓட்டு ஆயுதம் போன்றது அதை பயன்படுத்துங்கள்” : முதல் பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி ஆவேசம்


”உங்கள் ஓட்டு ஆயுதம் போன்றது அதை பயன்படுத்துங்கள்” : முதல் பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி ஆவேசம்
x
தினத்தந்தி 12 March 2019 5:52 PM IST (Updated: 12 March 2019 5:52 PM IST)
t-max-icont-min-icon

உங்கள் ஓட்டு ஆயுதம் போன்றது அதை பயன்படுத்துங்கள் என தனது முதல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.

காந்திநகர்,

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தனது முதலாவது அரசியல் பேரணியில் கலந்து கொண்டு  பா.ஜ.க மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார்.

காந்தி நகர் தேர்தல் பிரசார பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தி வதேரா பேசியதாவது:-

இந்த தேர்தலில்  நீங்கள் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறீர்கள். "தேவையில்லாத பிரச்சினைகளால்" கவனத்தை திசை திரும்ப வேண்டாம்.

"நான் என் இதயத்தில் இருந்து பேச விரும்புகிறேன். ஒரு விழிப்புணர்வு குடிமகனாக இருப்பதை விட  பெரிய தேசபக்தி இருக்க முடியாது. உங்கள் விழிப்புணர்வு ஒரு ஆயுதம், உங்கள் வாக்கு ஒரு ஆயுதம். ஆனால் இந்த ஆயுதம்  யாருக்கும் தீங்கு விளைவிப்பது இல்லை. நீங்கள்  மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும்". ஏப்ரல்-மே தேர்தல் சுதந்திர இயக்கத்தைவிட "குறைவான ஒன்றே" .

சிந்தித்து முடிவு செய்யுங்கள். அவர்கள் வாக்களித்த வேலைவாய்ப்புகள் எங்கே? ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறினார்கள். பெண்களின் பாதுகாப்பு என்ன ஆனது? 

"அவர்கள்" அனைத்து வகையான பிரச்சினைகளையும் எழுப்புவார்கள். "சரியான கேள்விகளை கேளுங்கள், இது உங்கள் நாடு. நீங்கள் நாட்டை காப்பாற்ற வேண்டும், நமது அமைப்புகள்  தாக்கப்பட்டு, வெறுப்பு எல்லா இடங்களிலும் பரவுகிறது" என கூறினார்.

Next Story