சீன அதிபரை கண்டு மோடி அச்சப்படுகிறார் : ராகுல் காந்தி கடும் தாக்கு


சீன அதிபரை கண்டு மோடி அச்சப்படுகிறார் : ராகுல் காந்தி கடும் தாக்கு
x
தினத்தந்தி 14 March 2019 11:02 AM IST (Updated: 14 March 2019 1:19 PM IST)
t-max-icont-min-icon

பலவீனமான மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கண்டு அச்சப்படுவதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சியாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்துள்ளது.  சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கண்டு மோடி அச்சப்படுவதாக ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “ பலவீனமான மோடி ஜி ஜின்பிங்கை பார்த்து பயப்படுகிறார். இந்தியாவிற்கு எதிரான சீனாவின் நடவடிக்கை பற்றி ஒரு வார்த்தை கூட அவரது வாயில் இருந்து வரவில்லை.
மோடியின் சீன தூதரக கொள்கையாதெனில்,  குஜராத்தில் ஜி ஜின்பிங்குடன் உலாவுவது, டெல்லியில் ஜின்பிங்கை கட்டி  அணைப்பது, சீனாவில் ஜின்பிங்கை  தலைகுனிந்து வணங்குவது ஆகியவைதான் ஆகும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Next Story