புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியின் கூட்டாளி கைது


புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியின் கூட்டாளி கைது
x
தினத்தந்தி 23 March 2019 4:25 AM IST (Updated: 23 March 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் முத்தாசிர். சமீபத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் அவன் கொல்லப்பட்டான்.

புதுடெல்லி,

முத்தாசிருடைய நெருங்கிய கூட்டாளியான சஜ்ஜத் கான் (வயது 27) நேற்று டெல்லியில் கைது செய்யப்பட்டான். புலவாமாவை சேர்ந்த இவன், ஜெய்ஷ் இ முகமது இயக்க உறுப்பினர் ஆவான். 

டெல்லியில் ஒரு ஆதரவு கும்பலை உருவாக்கும் வேலையை இவனிடம் முத்தாசிர் ஒப்படைத்து இருந்தான். இத்தகவலை டெல்லி சிறப்பு பிரிவு போலீஸ் துணை கமி‌ஷனர் பிரமோத் சிங் குஷ்வா தெரிவித்தார்.


Next Story