காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; இந்திய வீரர் பலி


காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; இந்திய வீரர் பலி
x
தினத்தந்தி 24 March 2019 12:21 PM IST (Updated: 24 March 2019 12:21 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் பலியாகி உள்ளார்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர் மற்றும் கெமி பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியது.  

இதனை தொடர்ந்து இந்திய ராணுவமும் இதற்கு பதிலடி கொடுத்தது.  இந்த சண்டை நள்ளிரவிலும் தொடர்ந்தது.  இந்திய தரப்பிலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.  பாகிஸ்தானிய படைகள் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகளை கொண்டு இந்திய முகாம்கள் மற்றும் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தின.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் நகரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானிய படைகள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு படுகாயமேற்பட்டது.  உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.  ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.

இதனால் கடந்த 4 நாட்களில் 2 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.  கடந்த வியாழ கிழமை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் யாஷ் பால் (வயது 24) என்ற ராணுவ வீரர் பலியானார்.

Next Story