பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் ஆணையத்திற்கு திரையிட உத்தரவு


பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் ஆணையத்திற்கு திரையிட உத்தரவு
x
தினத்தந்தி 15 April 2019 8:41 AM GMT (Updated: 15 April 2019 8:41 AM GMT)

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் ஆணையத்திற்கு திரையிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரதமர் மோடியின் இளமை காலத்து வாழ்க்கையில் இருந்து 2014-ம் ஆண்டு தேர்தலில் வென்று பிரதமர் ஆனது வரை உள்ள சம்பவங்கள், அவர் நிறைவேற்றிய திட்டங்கள் இடம் பெறும் வகையில் அவருடைய வாழ்க்கை வரலாறு படம் ‘பி.எம். நரேந்திரமோடி’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. இப்படம் தேர்தலையொட்டி வெளியாக தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் 10-ம் தேதி, மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் முடியும் வரையில் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனை எதிர்த்து தயாரிப்பாளர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. திரைப்படத்தில் அரசியல் பிரசாரம் கிடையாது, உத்வேகம் அளிக்கும் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் ஆணையத்திற்கு திரையிட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது. படத்தை பார்த்த பின்னர் அதனை திரையிடலாமா? வேண்டாமா? என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் 19-ம் தேதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அடுத்தக்கட்ட விசாரணை ஏப்ரல் 22-ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் கூறியது.

Next Story