வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழப்பு
வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் எதிர்பாராத விதமாக புழுதியுடன் பெய்த கனமழையினால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினார். இதனால் நேரிட்ட விபத்து சம்பவங்களில் இருமாநிலங்களிலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்திலும் இடி, மின்னலுடன் கனமழை பல்வேறு இடங்களில் பெய்தது. அப்போது நேரிட்ட விபத்துக்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இம்மாநிலங்களில் மழையினால் நேரிட்ட விபத்து சம்பவங்களில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அடுத்த 24 மணி நேரங்களுக்கு புழுதி புயல், இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மழை மற்றும் இடியினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான உதவியை செய்ய மத்திய அரசு தயாராகவே உள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் நிலையை உள்துறை அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story