தேசிய செய்திகள்

அருணாசல பிரதேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் + "||" + Strong 6.1-magnitude earthquake rocks NE India: USGS

அருணாசல பிரதேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அருணாசல பிரதேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
புதுடெல்லி,

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கம் அதிகாலை 1.45 மணிக்கு ஏற்பட்டது. அலோங் பகுதியின் தென் கிழக்கே 40 கி.மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. 

இந்தியாவின் மக்கள் தொகை குறைந்த மாநிலங்களில் ஒன்றாக அருணாச்சல பிரதேசம் திகழ்கிறது. அருணாசல பிரதேசத்தை ஒட்டியுள்ள திபெத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது. 

அருணாசல பிரதேசத்துக்கு சீனாவும் உரிமை கொண்டாடி வருகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாசல பிரதேசம் இன்று இந்தியா திட்டவட்டமாக கூறி வருகிறது. ஆனால், அந்த பிராந்தியத்தில் உள்ள 90 ஆயிரம் சதுர கி.மீட்டர் பகுதிகளை தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு
இந்தோனேசியாவின் ஹல்மாஹேரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. ஆசிய கைப்பந்து: இந்தியா தோல்வி
ஆசிய கைப்பந்து போட்டியில், சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
3. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்
போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் என்று முசாபராபாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இம்ரான் கான் பேசினார்.
4. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைப்பதை நிறுத்த வேண்டும்: இந்தியா வேண்டுகோள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்து உள்ளது.
5. ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்றில் இந்தியா-ரஷியா
ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்றில் இந்திய அணி, ரஷியாவுடன் மோத உள்ளது.