தேசிய செய்திகள்

முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் + "||" + Delhi HC seeks Robert Vadra's response on ED's plea to cancel his anticipatory bail in PMLA case

முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு தொடர்பாக ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் விடுத்துள்ளது.
புதுடெல்லி,

லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட சொத்துகள் தொடர்பாக ராபர்ட் வதேரா, அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. 

அப்போது விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்பது போன்ற நிபந்தனைகளை விசாரணை நீதிமன்றம் விதித்தது. 

இந்நிலையில் ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் முன்ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து  டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாகவும், ஆதாரங்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்குமாறு ராபர்ட் வதேராவுக்கு நோட்டீஸ் அனுப்பி  வழக்கை ஜூலை 17-க்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை தொடருகிறது - ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை இன்று வரை நீடித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
2. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 23-ம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
3. ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்: இன்று ஆஜராக உத்தரவு
சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டில், விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.