இலங்கை, மொரீஷியஸ் தலைவர்களுடன் மோடி சந்திப்பு


இலங்கை, மொரீஷியஸ் தலைவர்களுடன் மோடி சந்திப்பு
x
தினத்தந்தி 31 May 2019 10:45 PM GMT (Updated: 31 May 2019 10:45 PM GMT)

இலங்கை அதிபர் சிறிசேனா மற்றும் மொரீஷியஸ் பிரதமர் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

பிரதமராக நரேந்திர மோடி 2-வது தடவையாக நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில், ‘பிம்ஸ்டெக்’ நாடுகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அவர்களுடனான தனித்தனி சந்திப்புகளை பிரதமர் மோடி தொடங்கினார். கிர்கிஸ் குடியரசு அதிபர் சூரன்பே ஜீன்பேகோவை மோடி முதலில் சந்தித்தார். வருங்காலத்தில், பொருளாதார, சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், நேற்று இலங்கை அதிபர் சிறிசேனாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இச்சந்திப்பு நடந்தது. இருதரப்பு நலன் சார்ந்த பிரச்சினைகள் பற்றி இருவரும் ஆலோசனை நடத்தினர்.

மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜகன்னாத்தையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இருவரும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.

இதுபோல், மேலும் பல உலக தலைவர்களை சந்திக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.


Next Story