தேசிய செய்திகள்

கங்கையை தூய்மைப்படுத்த பிரதமர் மோடிக்கு சாதுக்கள் இயக்கம் 13-ந் தேதிவரை ‘கெடு’ + "||" + Seers serve ultimatum to PM to ensure clean Ganga

கங்கையை தூய்மைப்படுத்த பிரதமர் மோடிக்கு சாதுக்கள் இயக்கம் 13-ந் தேதிவரை ‘கெடு’

கங்கையை தூய்மைப்படுத்த பிரதமர் மோடிக்கு சாதுக்கள் இயக்கம் 13-ந் தேதிவரை ‘கெடு’
கங்கையை தூய்மைப்படுத்த பிரதமர் மோடிக்கு சாதுக்கள் இயக்கம் 13-ந் தேதிவரை ‘கெடு’ விதித்துள்ளது.
புதுடெல்லி,

கங்கையை தூய்மைப்படுத்தக்கோரி, ‘மாத்ரி சதன்‘ என்ற சமூக-ஆன்மிக இயக்கத்தை சேர்ந்த பிரமச்சாரி ஆத்மபோதானந்தா என்ற சாது, 194 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார். கடந்த மாதம் 4-ந் தேதி, மத்திய அரசு வாக்குறுதி அளித்ததன்பேரில், அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.


இந்நிலையில், அந்த இயக்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், “கங்கையை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை ஜூன் 13-ந் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்ற தவறினால், போராட்டத்துக்கான திட்டத்தை வகுப்போம்“ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாதுக்கள் அடங்கிய இந்த இயக்கம், கங்கையை தூய்மைப்படுத்த வலியுறுத்தி, கடந்த 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.