தென்கிழக்கு அரபி கடலில் வாயு புயல் உருவானது; இந்திய வானிலை ஆய்வு மையம்


தென்கிழக்கு அரபி கடலில் வாயு புயல் உருவானது; இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 11 Jun 2019 7:40 AM IST (Updated: 11 Jun 2019 7:40 AM IST)
t-max-icont-min-icon

தென்கிழக்கு அரபி கடலில் வாயு புயல் உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்கிழக்கு அரபி கடலில் வாயு புயல் உருவாகியுள்ளது.  வடக்கு நோக்கி நகரும் புயல் 24 மணிநேரத்தில் தீவிர புயலாக உருவெடுக்கும்.  இந்த புயல் குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹுவா பகுதியில் ஜூன் 13ந்தேதி கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

புயல் கரையை கடக்கும்பொழுது மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும்.  இந்த புயலால் வருகிற ஜூன் 13ந்தேதி 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்து உள்ளது.

இதனால் கடலில் அதிக சீற்றம் காணப்படும் என்றும் அந்த பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்துள்ளது.

Next Story